சத்தீஸ்கர் அரசியலில் அதிரடி மாற்றங்கள்; மாற்றத்திற்குள்ளாகும் காங்கிரஸ்

வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த பார்வையாளராக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்  (கோப்புப்படம்)
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (கோப்புப்படம்)

சத்தீஸ்கரில் அதிகார போட்டி நிலவிவரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். நான்கு துணை தலைவர்கள், மூன்று பொதுச் செயலாளர்கள், தகவல் தொடர்பு துறையின் தலைவர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கரில் சமீபத்தில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

கிரிஷ் தேவாங்கன், அடல் ஸ்ரீவஸ்தவா, பானு பிரதாப் சிங் மற்றும் பத்மா மன்ஹர் ஆகியோருக்கு பதிலாக அருண் சிங்கானியா, பி. ஆர். குந்தே, அம்பிகா மார்க்கம் மற்றும் வாணி ராவ் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாசுதேவ் யாதவ், அமர்ஜீத் சாவாலா மற்றும் சுமித்ரா திருத்லாஹரே ஆகியோருக்கு பதில் துவாரகா பிரசாத் யாதவ், உத்தம வாசுதேவ் மற்றும் பங்கஜ் சர்மா ஆகியோர் சத்தீஸ்கர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் தொடர்பு துறையின் புதிய தலைவராக சுஷில் ஆனந்த் சுக்லா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, ஷைலேஷ் நிதின் திரிவேதி என்பவருக்கு இப்பதவி அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த பார்வையாளராக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே, சத்தீஸ்கர் முதலமைச்சர் மாற்றப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தில்லிக்கு சென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com