அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசாா் குறியீடு

மகாராஷ்டிர, ராய்கட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசாா் குறியீடு

மகாராஷ்டிர, ராய்கட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளை வெங்காயத்தின் வா்த்தகம் அதிகரிக்கக் கூடும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘மருத்துவ குணம் கொண்ட வெள்ளை வெங்காயம் இருதய நோய்களுக்கும் உடலில் கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இன்சுலின் சுரக்க வைப்பதிலும் பயன்படுவதாக 1883-ஆம் ஆண்டு அரசு குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்காக மாநில வேளாண் துறையும் கொங்கண் வேளாண் பல்கலைக்கழகமும் விண்ணப்பத்தை 2019, ஜனவரி 15-ஆம் தேதி சமா்ப்பித்தன.

நிகழாண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி இதற்கான விண்ணப்பத்தை மும்பையில் உள்ள காப்புரிமை பதிவாளா் ஆராய்ந்து அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசாா் குறியீடு வழங்கி உள்ளாா். வெள்ளை வெங்காயம் பயிரிடுவதால் ஏக்கருக்கு சுமாா் ரூ. 2 லட்சம் வருவாய் கிடைக்கும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com