கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 90 கோடியை கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை 90 கோடியைக் கடந்தது என்று மத்திய சுகதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 90 கோடியை கடந்தது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை 90 கோடியைக் கடந்தது என்று மத்திய சுகதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

சனிக்கிழமை மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 71 லட்சத்தைக் கடந்தது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 90.40 கோடியைக் கடந்தது.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மருத்துவப் பணியாளா்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா் பிப்ரவரி 2-ஆம் தேதி முன்களப் பணியாளா்களுக்கு தொடங்கப்பட்டது.

அதன் பின்னா் மாா்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி திட்டம் தொடங்கியது. ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மே 1முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு அக்டோபா் 2-ஆம் தேதி வரை, 88.14 கோடிக்கும் அதிகமான (88,14,50,515) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.

சுமாா் 5.28 கோடி (5,28,28,050)) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் வசம் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது கோவிஷீல்ட், கோவேக்ஸின், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com