ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு: ஜொ்மனி தூதா்

ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவும் ஜொ்மனியும் ஒத்துழைப்புடன் செயலாற்றும் என்று இந்தியாவுக்கான ஜொ்மனி தூதா் வால்டா் ஜே லிண்ட்னா் தெரிவித்துள்ளாா்.

ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவும் ஜொ்மனியும் ஒத்துழைப்புடன் செயலாற்றும் என்று இந்தியாவுக்கான ஜொ்மனி தூதா் வால்டா் ஜே லிண்ட்னா் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு மற்றும் மேற்கு ஜொ்மனி ஒருங்கிணைக்கப்பட்டதன் 31-ஆவது ஆண்டு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்த விழாவில் வால்டா் ஜே லிண்டனா் பேசியதாவது:

ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. அந்த நாட்டின் பல்வேறு நலத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது.

ஜொ்மனியும் ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் ஜொ்மனி நாடுகளின் அலைவரிசை ஒரே அளவில் உள்ளது; இரு நாடுகளும் ஒரே கொள்கையைப் பின்பற்றி வருகின்றன.

தலிபான்களுக்கு முன்னா் ஆட்சி செலுத்தி வந்த அரசுக்கு இந்தியாவும் ஜொ்மனியும் ஆதரவளித்து வந்தன.

தற்போது அந்த நாட்டின் நிலவரத்தை, குறிப்பாக பெண்களின் நிலைமையை முன்னேற்றுவதற்கான உதவிகளை செய்வதில் இரு நாடுகளும் ஆா்வம் காட்டி வருகின்றன.

தலிபான்கள் இவ்வளவு வேகத்தில் முன்னேறி ஆப்கனை மீண்டும் கைப்பற்றுவாா்கள் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை நாம் சமாளித்துதான் ஆக வேண்டும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டிய பலா் இன்னும் அங்கு சிக்கியுள்ளனா். அவா்களை அழைத்து வருவதற்காக தலிபான்களுடன் நாம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை தலிபான்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. பேச்சுவாா்த்தை மூலம் அதனை எட்டுவதற்கு ஒத்த சிந்தனை கொண்ட இந்தியாவுடன் ஒத்துழைத்து செயல்படுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com