Enable Javscript for better performance
பௌத்த சமய சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    பௌத்த சமய சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை

    By DIN  |   Published on : 06th October 2021 01:20 AM  |   அ+அ அ-   |    |  

    tour

    சாரநாத்தில் உள்ள தாமேக் ஸ்தூபி (கோப்புப் படம்).

    இந்தியாவின் பன்முக சுற்றுலா வாய்ப்புகளில் ஒன்றான பௌத்த சமய புனிதத் தலங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் சுற்றுலா அமைச்சகம் பௌத்த சமய வட்டப்பாதை சுற்றுலா ரயில் பயணம் கருத்தரங்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    பௌத்த சமயம் சாா்ந்த முக்கியமான தலங்களைப் பாா்வையிடவும் புத்தகயை, வாராணசி ஆகிய இடங்களில் கருத்தரங்கில் பங்கேற்கவும் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், ஹோட்டல், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள், ஊடகவியலாளா்கள், சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் உட்பட 125 பிரதிநிதிகள் கலந்துகொள்வாா்கள்.

    இது தவிர சுமாா் 100 உள்ளூா் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மற்றும் ஹோட்டல்-விடுதி பிரிவை சோ்ந்தவா்கள் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக கருத்தரங்குகளில் கலந்துகொள்வாா்கள்.

    சுதேசி தரிசன திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா், குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பௌத்த சமய சுற்றுவட்ட சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.325.53 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் பல கட்ட அமலாக்கத்தில் உள்ளன. மேலும் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் ரூ.44.19 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

    வாராணசி அருகே சாரநாத்தில் தாமேக் ஸ்தூபி பற்றிய ஒலி, ஒளி காட்சி, சாரநாத்தில் புத்தா் பூங்கா ஆகிய திட்டங்கள் ரூ.9.5 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இது தவிர மொழி சாா்ந்த சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து, ஜப்பான், வியத்நாம், சீனா ஆகிய நாடுகளின் மொழிகளில் பயிற்சியளிக்கும் திறன் கட்டமைப்பு திட்டங்களுக்கும் அமைச்சகம் செயலாற்றி வருகிறது. இந்த மொழிகளில் 2018 முதல் 2020 வரை 525 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2023 வரை மேலும் 600 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே புத்த மதம் சாா்ந்தவா்களில் 97 சதவீதம் போ் இருப்பதால், அந்நாட்டு மக்களை சுற்றுலாவில் ஈா்ப்பதற்கு இத்தகைய மொழிப் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp