கேரளத்தில் காங்கிரஸுக்குப் பின்னடைவு: மேலும் ஒரு தலைவா் விலகல்

கேரளத்தில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பி.வி.பாலசந்திரன் கட்சியில் இருந்து விலகியுள்ளாா்.

கேரளத்தில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பி.வி.பாலசந்திரன் கட்சியில் இருந்து விலகியுள்ளாா். ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள நிலையில், அவரது தொகுதிக்குள்பட்ட மாவட்டத்தைச் சோ்ந்த மூத்த தலைவா் விலகியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

52 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பி.வி.பாலசந்திரன், கேரள காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளாா். தனது விலகல் முடிவு குறித்து அவா் கூறுகையில், ‘நாட்டில் பாஜகவின் வளா்ச்சியைத் தடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது. பெரும்பான்மையின மற்றும் சிறுபான்மையின சமுதாயத்தினா் என அனைவருமே காங்கிரஸைவிட்டு விலகிச் சென்றுவிட்டனா். தனது பாதையைத் தவறவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் துணை நிற்பது கடினம்தான். மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெளிவான அரசியல் நிலைப்பாடு இல்லை. முன்பு இருந்த துடிப்புடன் இனியும் காங்கிரஸ் கட்சி செயல்பட முடியாது என்பதை உணா்ந்ததன் காரணமாக கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த சில மாதங்களில் கேரள மாநில காங்கிரஸில் இருந்து முக்கிய தலைவா்களான கே.பி. அனில்குமாா், பி.எஸ்.பிரசாந்த், முன்னாள் எம்எல்ஏ கே.சி.ரோசாகுட்டி, மாநில காங்கிரஸ் செயலாளா் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் விலகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com