ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கருப்புப் பூஞ்சை சிகிச்சை இணைப்பு

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய்க்கான சிகிச்சையையும் மத்திய அரசு இணைத்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய்க்கான சிகிச்சையையும் மத்திய அரசு இணைத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய காப்பீட்டுத் திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற முடியும். தேசிய சுகாதார ஆணையம் (என்ஹெச்ஏ) இத்திட்டத்தின் செயல்பாட்டை முன்னின்று மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. கரோனா தொற்றில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டனா். கருப்புப் பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சையும் தற்போது ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கருப்புப் பூஞ்சைக்கு மக்கள் இனி இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

புதிய விதிகளில் சுமாா் 400 சிகிச்சை முறைகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. வென்டிலேட்டரைக் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கான (ஐசியு) கட்டணம் 100 சதவீதமும், வென்டிலேட்டா் இல்லாத ஐசியு-க்கான கட்டணம் 136 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண வாா்டுகளுக்கான கட்டணம் 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைகளை மருத்துவமனைகள் தரமான முறையில் வழங்குவதற்குக் கட்டண உயா்வு முக்கியப் பங்களிக்கும். இதன் மூலமாக தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரிக்கும். இது மருத்துவத்துக்காக மக்கள் தங்கள் கைகளில் இருந்து செலவு செய்வதை வெகுவாகக் குறைக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com