‘நீதியின் குரலை ஒடுக்க விடமாட்டோம்’: பிரியங்கா காந்தி

நீதியின் குரலை ஒடுக்க விடமாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

நீதியின் குரலை ஒடுக்க விடமாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க | லக்னௌ சென்ற மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்?- ராகுல் காந்தி சரமாரி கேள்வி

தற்போது லக்கிம்பூர் செல்வதற்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு அனுமதி அளித்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பிரியங்கா காந்தி இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். விவசாயிகளுக்கான நீதியின் குரல் பாஜக அரசால் சிறை பிடிக்கப்படுகின்றன. நீதியின் குரலை ஒடுக்க விடமாட்டோம்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com