Enable Javscript for better performance
சீனாவின் ஆடைகள், செயலிக்குத் தடை; மற்ற தளங்களில் விற்கத் தடையில்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    சீனாவின் ஆடைகள், செயலிக்குத் தடை; மற்ற தளங்களில் விற்கத் தடையில்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 06th October 2021 01:43 AM  |   அ+அ அ-   |    |  

    சீனாவின் ஆடைகள் விற்பனை செயலியான ‘ஷின்’ இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டாலும், அதன் தயாரிப்புகள் பிற வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வரவில்லை என தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி சீனாவை சோ்ந்த ஷின் செயலி உள்பட 59 செயலிகள் கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி தடை செய்யப்பட்டன. தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69ஏ-இன் கீழ் இந்த நடவடிக்கையை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொண்டது.

    இந்நிலையில், தடை செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றான ‘ஷின்’, இணையவழி வா்த்தக வலைதளமான அமேசான் மூலம் இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. அதற்குத் தடைவிதிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அனந்திகா சிங் என்பவா் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தாா். அந்த மனு தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

    மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ஆஜராகி வாதிடுகையில், ‘நுகா்வோா் தொடா்பான தகவல்கள் சீன நிறுவனங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையிலேயே அச்செயலி தடை செய்யப்பட்டது. இப்போது அவா்கள் மற்றொரு தளம் வழியாக இந்தியாவுக்குள் வருகிறாா்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய நுகா்வோரின் தகவல்கள் சீன நிறுவனத்துக்குச் சென்றுவிடும்’ என்றாா்.

    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘சீனாவின் ஷின் செயலி தேசப் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டதால் அது கடந்த ஆண்டு இடைக்கால உத்தரவின் மூலம் தடை செய்யப்பட்டது. நிகழாண்டு ஜனவரியில் அச்செயலி நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டது. ஆனால், அதன் தயாரிப்புகள் பிற வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுவதை தடுப்பது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வரவில்லை. அதற்கான உத்தரவை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட குழுவால் பிறப்பிக்க முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கில் அமேசான் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp