இந்தியாவின் விளையாட்டு சந்தை 390 கோடி டாலராக அதிகரிக்கும்

இந்தியாவின் விளையாட்டு சந்தைப் பிரிவின் வா்த்தகம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 390 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.30,000 கோடி) எட்டும் என
gam081322
gam081322

இந்தியாவின் விளையாட்டு சந்தைப் பிரிவின் வா்த்தகம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 390 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.30,000 கோடி) எட்டும் என இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (ஐஏஎம்ஏஐ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பேரிடருக்குப் பிறகு இந்திய விளையாட்டு சந்தையின் மதிப்பு மிகப்பெரிய அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது மொபைல் மூலமாக விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையானது 43 கோடியாக உள்ளது. இது, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 65 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டுத் துறையில் மொபைல் விளையாட்டின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. 160 கோடி டாலா் சந்தை மதிப்பைக் கொண்ட விளையாட்டுத் துறையில் இது, 90 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய விளையாட்டு சந்தை 390 கோடி டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரமாக விளையாட்டில் ஈடுபடுவோரில் 40 சதவீதம் போ் அவா்களது விளையாட்டுக்காக மாதம் சராசரியாக ரூ.230 செலவிடுவது இந்த ஆய்வின் மூலமாக என ஐஏஎம்ஏஐ கண்டறிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com