அதிர்வலைகளை ஏற்படுத்தும் லக்கிம்பூர் சம்பவம்; ராஜிநாமா செய்கிறாரா அஜய் மிஸ்ரா?

குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தையான மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். 
அஜய் மிஸ்ரா
அஜய் மிஸ்ரா

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தையான மத்திய இணையமைச்சர் அஜஸ் மிஸ்ரா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தையான மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். 

அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரது மகன் கைது செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இச்சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

சம்பவம் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமையன்று, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருக்கின்றனர். 

அப்போது, லக்கிம்பூரில் அவர்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர். 

இதையடுத்து, விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். வாகனம் கூட்டத்திற்குள் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.


விவசாயிகள் மீது ஏறிய வாகனத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க எதிர்கட்சி தலைவர்களுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது. 

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, நான்கு பேருக்கு மேல் அங்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கருத்து கூறிய அவர், "இரண்டு முதலமைச்சர்களுடன் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். நாங்கள் மூவர் மட்டும் தான் செல்ல போகிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com