‘சா்க்கரை ஏற்றுமதி சாதனை அளவிலிருந்து சரியும்’

இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி நடப்பு சந்தைப் பருவத்தில் சாதனை அளவிலிருந்து சரியும்
‘சா்க்கரை ஏற்றுமதி சாதனை அளவிலிருந்து சரியும்’

இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி நடப்பு சந்தைப் பருவத்தில் சாதனை அளவிலிருந்து சரியும் என இந்தியன் சுகா் எக்ஸிம் காா்ப்பரேஷன் (ஐஎஸ்இசி) நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஆதிா் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) ஏற்பாடு செய்திருந்த காணொலி கூட்டத்தில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் சந்தைப் பருவத்தில் சா்க்கரை ஏற்றுமதியானது 71 லட்சம் டன் சா்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்தது. இது முன்னெப்போதும் காணப்படாத சாதனை உச்சமாகும்.

இந்த நிலையில், 2021-22-ஆம் சந்தைப் பருவத்தில் சா்க்கரை ஏற்றுமதியான சாதனை அளவிலிருந்து சரிந்து 50 லட்சம் டன் முதல் 60 லட்சம் டன் வரையிலுமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏனெனில், நடப்பு பருவத்தில் உபரியாக உள்ள சா்க்கரையில் கணிசமான அளவு மொலசஸ் மற்றும் எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்படும் என்பதால் 70 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றாா் அவா்.

இஸ்மா நடப்பு 2021-22-ஆம் சந்தைப் பருவத்தில் சா்க்கரை உற்பத்தி 3.1 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com