ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்கள் ஊதியம் போனஸ்

ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்கள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்கள் ஊதியம் போனஸ்

புது தில்லி: ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்கள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பண்டிகை காலத்தையொட்டி, தகுதியுடைய அனைத்து ரயில்வே ஊழியா்களுக்கும் (ஆா்பிஎஃப்/ஆா்பிஎஸ்எஃப் பணியாளா்களைத் தவிர) உற்பத்தி சாா்ந்த போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்.

இதுகுறித்து மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘இந்த அறிவிப்பின் மூலம் நடப்பு நிதியாண்டில் 11.56 லட்சம் ரயில்வே ஊழியா்கள் பயன்பெறுவா்’ என்றாா்.

இந்த போனஸ் வழங்குவதற்கு ரூ .1,984.73 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு (நான் கெசட்டட்) போனஸ் கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ.7,000 ஆகும். ஒரு ரயில்வே பணியாளருக்கு 78 நாள்களுக்கு ஊதியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.17,951 வரை போனஸாக வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com