முன்கூட்டியே கிடைத்த தகவல்; நான்கே நிமிடங்களில் விரைந்து சென்று காப்பாற்றிய காவல்துறை

தற்கொலைக்கு முயன்றவரின் தாய் காவல்துறையினருக்கு தக்க சமயத்தில் தகவல் கொடுத்த நிலையில், நான்கே நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலையை தடுத்து நிறுத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சரியான நேரத்தில் தில்லி காவல்துறையினர் சென்றதால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு தில்லியில் ஜாமியா நகரில் பணப் பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோ ரிக்சா ஓட்டுநரை தில்லி காலவ்துறையைச் சேர்ந்த இருவர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தற்கொலைக்கு முயன்றவரின் தாய் காவல்துறையினருக்கு தக்க சமயத்தில் தகவல் கொடுத்ததாகவும் நான்கே நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றதாகவும் தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், "சார்பு ஆய்வாளர் ராமதாஸ், தலைமை காவலர் மகேந்திர சிங் ஆகியோர் அப்பெண்ணின வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். உள்ளிருந்து தாழிடப்பட்ட அறைவின் கதவுகளை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்றனர். 

அந்த நபரை காப்பாற்றிய பிறகு, எதற்கு தற்கொலை முயற்சி எடுத்துள்ளீர்கள் என காவல்துறையினர் அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனக்கு பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் தனது ஆட்டோவை விற்க தாய் முயற்சித்ததாகவும் அவர் பதிலளித்தார். 

(தற்கொலை ஒரு போதும் பிரச்னைக்கு தீர்வளிக்காது. தற்கொலை எண்ணம் உள்ளவர் அருகில் உள்ள மன நல சிறப்பு மருத்துவரை தொடர் கொள்ளுங்கள். உதவிக்கு, 9999666555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com