மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

ஆறு ஜில்லா பரிஷத்துகளில் காலியாகவுள்ள 84 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் செவ்வாய்கிழமை நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் ஆறு மாவட்டங்களில் 85 ஜில்லா பரிஷத்து வார்டுகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் பாஜக 22 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. 144 பஞ்சாயத்து சமிதி வார்டுகளில் 36 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

துலே, நந்தூர்பார், அகோலா, வாஷிம், நாக்பூர், பால்கர் ஆகிய ஆறு ஜில்லா பரிஷத்துகளில் காலியாக உள்ள 84 வார்டுகளுக்கும் 37 பஞ்சாயத்து சமிதிகளில் உள்ள 141 வார்டுகளுக்கும் செவ்வாய்கிழமை இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதன்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஒரு ஜில்லா பரிஷத்து வார்டிலும் மூன்று பஞ்சாயத்து சமிதி வார்டுகளிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 85 ஜில்லா பரிஷத்து வார்டுகளில், பாஜக 22 வார்டுகளையும் காங்கிரஸ் 19 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. 15 வார்டுகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 12 வார்டுகளில் சிவசேனையும் வெற்றிபெற்றுள்ளது.

சுயேச்சை நான்கு வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு வார்டையும் மற்றவர்கள் 12 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். பஞ்சாயத்து சமிதி இடைத்தேர்தலை பொறுத்தவரை, அதிகபட்மாக காங்கிரஸ் 36 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. பாஜக 33 வார்டுகளிலும் சிவசேனை 23 வார்டுகளிலும் தேசியவாத காங்கிரஸ் 18 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

பஞ்சாயத்து சமிதியை பொறுத்தவரை, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ்- சிவசேனை கூட்டணி தேர்தல் நடத்தப்பட்ட 144 வார்டுகளில் 73 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் ஏழு பேரும், மகாராஷ்டிர நவநிர்மான் சேனா ஒன்றும் பிற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 26 பஞ்சாயத்து சமிதி இடங்களை கைப்பற்றின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com