ஆளுநர் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார் மம்தா!

பவானிபூர் சட்டப்பேரவையின் உறுப்பினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார் மம்தா
ஆளுநர் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றார் மம்தா

பவானிபூர் சட்டப்பேரவையின் உறுப்பினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்தம் 26 சுற்றுகள் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் வேட்பாளா் மம்தா பானா்ஜி 85,263 வாக்குகளைப் பெற்று 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இன்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உடன், ஜாங்கிபூா், சம்சோ்கஞ்ச் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜாகிா் ஹுசைன், சுஜித் தாஸ் ஆகியோருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், நந்திகிராம் தொகுதியில் அக்கட்சியின் தலைவா் மம்தா பானா்ஜி, பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தாா். இருப்பினும் அவா் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். அவா் பதவியில் நீடிக்க வேண்டுமெனில் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. மம்தா போட்டியிட ஏதுவாக, மாநில அமைச்சரும் பவானிபூா் எம்எல்ஏவுமான சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த வெற்றியைத் தொடா்ந்து மம்தா பானா்ஜி முதல்வராகத் தொடா்வதில் இருந்த சிக்கல் நீங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com