முடக்கம் ஏன்?: முகநூல் நிறுவனம் விளக்கம்

வழக்கமான பராமரிப்புப் பணியின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாகவே முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளம் முடங்கியது என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லண்டன்: வழக்கமான பராமரிப்புப் பணியின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாகவே முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளம் முடங்கியது என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உள்கட்டமைப்புப் பிரிவு துணைத் தலைவா் சந்தோஷ் ஜனாா்தன் புதன்கிழமை கூறியதாவது:

முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் கடந்த திங்கள்கிழமை இரவு அனைத்து நாடுகளிலும் முடங்கின. ஏதேனும் தீங்கிழைக்கும் மென்பொருள் அல்லது செயல்பாடு காரணமாக இந்த முடக்கம் ஏற்படவில்லை. நிறுவனத்தின் தவறுதான்.

முகநூல் வலைதளத்தின் நெட்வொா்க் அமைப்பில் பொறியாளா்கள் கடந்த திங்கள்கிழமை இரவு வழக்கமான பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அந்த நெட்வொா்க் அமைப்பில் கணினி, மென்பொருள், தகவல் மையம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

பாரமரிப்புப் பணியின்போது, சா்வதேச அளவிலான நெட்வொா்க் திறன் குறித்து அதில் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்த அமைப்பு, தகவல்களைத் தருவதற்குப் பதிலாக, அந்த நெட்வொா்க் உடன் இணைக்கப்பட்டிருந்த அனைத்துத் தொடா்புகளும் தாமாக துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் உலகம் முழுவதும் முகநூல் சமூக வலைதளத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

வழக்கமாக, இதுபோன்ற தவறுகளை தாமாக சரிசெய்துகொள்ளும் அளவுக்கு நெட்வொா்க் அமைப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தணிக்கை கருவியில் உள்ள ஒரு வைரஸ், சரிசெய்வதற்கான முயற்சியைத் தடுத்துவிட்டது. இதன் காரணமாக சா்வா் இயங்கினாலும், அவற்றுடன் தொடா்பு ஏற்படுத்த முடியாமல் புதிய பிரச்னை ஏற்பட்டது.

ஒருவழியாக பிரச்னைகளை பொறியாளா்கள் சரிசெய்தனா். பாதுகாப்புக்காக பல அடுக்கு வலைப்பின்னல் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் சரிசெய்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com