உல்லாச கப்பலில் போதை பொருள் சிக்கிய விவகாரம்; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட அமைச்சர்

போதைபொருள் சிக்கிய விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விசாரணை குறித்து கேள்வி எழுப்பிய மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நவாப் மாலிக்
நவாப் மாலிக்

கடந்த வாரம், மும்பை கடற்கரையில் உல்லாச கப்பலில் போதை பொருள் சிக்கிய நிலையில், அங்கிருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பல மர்மங்கள் இருப்பதாக பொதுவெளியில் பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில், போதைபொருள் சிக்கிய விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விசாரணை குறித்து கேள்வி எழுப்பிய மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், முதலில் 11 பேர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் பின்னர் பாஜக தலைவர் ஒருவருடன் பேசிய பிறகு மூவரை போதை தடுப்பு பிரிவு விடுதலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விடியோவில் விரிவாக பேசிய நவாப் மாலிக், "கப்பலில் சோதனை செய்த பிறகு, போதை தடுப்பு பிரிவு அலுவலர் சமீர் வான்கடே 8-10 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் உண்மை என்னவென்றால் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், ரிஷப் சச்ச்தேவா, பிரதீக் காபா மற்றும் அமீர் பர்னிச்சர்வாலா ஆகிய மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.

கப்பலில் சோதனை செய்த பிறகு 11 பேரை காவலில் எடுத்தபோது, ​​அவர்கள் மூன்று பேரை யாருடைய வழிகாட்டுதலின் பேரில் விடுவித்தார்கள் என போதை தடுப்பு பிரிவிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம். உண்மைகளை வெளியிட வேண்டும் என போதை தடுப்பு பிரிவிடம் கேட்டு கொள்கிறோம். சமீர் வான்கடேவுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே ஏதாவது பேச்சு நடந்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து முதலமைச்சருக்கு (உத்தவ் தாக்கரே) கடிதம் எழுதுவேன். தேவைப்பட்டால், விசாரணை மேற்கொள்ள விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்றார்.

உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர்  அந்தக் கப்பலில் ஏறினர்.

கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள், சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து உள்ளனர்.

ஹாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட எட்டு பேரை காவலில் எடுக்க மும்பை நீதிமன்றம் போதை தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கியிருந்தது. பாஜக நிர்வாகி ஒருவரும் தனியார் துப்பறிவாளர் ஒருவரும் போதை தடுப்பு பிரிவு ரகசியமாக சோதனை நடத்தவிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றும் அவர்களும் அந்த சோதனையில் கலந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com