துடைப்பத்தை மீண்டும் கையில் எடுத்த பிரியங்கா காந்தி; யோதி ஆதித்யநாத்துக்கு பதிலடி

பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தில், "சனிக்கிழமையன்று, வால்மீகி கோயில்களில் சுத்தம் செய்யும் பணிகளை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும்" என பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசம் லக்னெளவில் தலித்துகள் அதிகம் வாழும் பகுதிக்கு திடீரென சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, துடைப்பம் எடுத்து அங்கு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். முன்னதாக, சித்தாப்பூர் விருந்தினர் மாளிகையில் அவர் காவலில் வைக்கப்பட்டபோது அங்குள்ள அறையை சுத்தம் செய்து விடியோ வெளியிட்டிருந்தார்.

அதனை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமரிசித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தில், "சனிக்கிழமையன்று, வால்மீகி கோயில்களில் சுத்தம் செய்யும் பணிகளை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும்" என பதிவிட்டிருந்தார்.

பிரியங்கா காந்தி அறையை சுத்தம் செய்து விடியோ வெளியிட்டதற்கு, "மக்கள் அவர்களை (காங்கிரஸ் தலைவர்கள்) இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்களாக மாற்ற விரும்பிகின்றனர். அதற்குதான் அவர்களை உருவாக்கியுள்ளனர். மற்றவர்களுக்கு தொல்லை தருவதற்கும் எதிர்மறை கருத்துகளை பகிர்தவது மட்டுமே இவர்களின் பணி. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை" என யோகி விமரிசித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தலித்துகள் காலணி சென்ற பிரியங்கா, துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். மேலும், இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "லவ் குஷ் நகரில் மக்களுடன் மக்களாக சேர்ந்து மகரிஷி வால்மீகி கோயிலை பிரியங்கா சுத்தம் செய்தார். நாட்டில் கோடிக்கணக்கான மக்களும் தூய்மை பணியாளர்களும் துடைப்பத்தை எடுத்துதான் சுத்தம் செய்கின்றனர் என பிரியங்கா குறிப்பிட்டார். பின்னர், கோயிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார்" என்றார்.

பின்னர் மக்களுடன் உரையாடிய பிரியங்கா, "இப்படி விமரிசித்து அவர் (யோகி) என்னை அவமானப்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு ஊழியர்களாக உள்ள கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளை அவமானப்படுத்தியுள்ளார்.

உங்கள் அனைவருடன் சேர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள இங்கு வந்துள்ளேன். துடைப்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்வது சுயமரியாதைக்கான செயல் என்பதை யோகிக்கு தெரியப்படுத்தினேன். உத்தரப் பிரதேச முதல்வர் சாதிய ரீதியாக பேசி தனது தலித்-விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்" என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com