நீங்கள் மத்திய அமைச்சர்களுடன் நேரடியாக உரையாட வேண்டுமா? அப்போ வாங்க! அழைப்பு விடுத்த பாஜக

பாஜக கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் ஒத்துழைப்பு துறை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் தொண்டர்களும் பொது மக்களும் மத்திய அமைச்சர்களுடன் நேரடியாக உரையாடலாம் என பாஜக தெரிவித்துள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் ஒத்துழைப்பு துறை திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. கரோனா காரணமாக ஒத்துழைப்பு துறை செயல்படாமல் இருந்தது.

எந்தெந்த அமைச்சர்கள் எந்த தேதியில் இருப்பார்கள் என்பது குறித்த விவரத்தை
பாஜக ஒத்துழைப்பு துறை ஒருங்கிணைப்பாளர் நவீன் சின்ஹா வெளியிட்டுள்ளார். அதன்படி, முதல் வார பட்டியலில், மன்சுக் மாண்டவியா, கிரண் ரிஜிஜூ, அனுராக் தாகூர், அஸ்வினி வைஷ்ணவ் ஆகிய மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பாஜக தலைமை அலுவலகத்தில் ஒத்துழைப்பு துறை தொடங்கப்பட்டது. அப்போது, மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த வெங்கையா நாயுடு அதை தொடங்கி வைத்தார். மத்திய பாஜகவின் கீழ் செயல்படும் 19 துறைகளில் ஒத்துழைப்பு துறையும் ஒன்று. 

தலைமை அலுவலகத்தில் உள்ள ஒத்துழைப்பு அறையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை மத்திய அமைச்சர்கள் கேட்டறிவர். பின்னர், அவர்களிடம் பிரச்னைகள் குறித்து மனு அளிக்கப்படும். 

அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளை நேரடியாக தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவிப்பதற்காக ஒத்துழைப்பு துறை தொடங்கப்பட்டது. மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகள் குறித்த விவரங்களும், அதில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் பின்னர், ஒத்துழைப்பு துறைக்கு அனுப்பப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com