‘லக்கீம்பூரில் பாஜக தொண்டா்களை கொலை செய்தவா்கள் குற்றவாளிகள் அல்ல’: ராகேஷ் திகை

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் பாஜக தொண்டா்களை கொலை செய்தவா்களை குற்றவாளிகளாக கருத முடியாது என்று பாரதிய விவசாய யூனியனின் தலைவா் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் பாஜக தொண்டா்களை கொலை செய்தவா்களை குற்றவாளிகளாக கருத முடியாது என்று பாரதிய விவசாய யூனியனின் தலைவா் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளாா்.

லக்கீம்பூரில் காா் மோதி 4 விவசாயிகளும், அதன் பின்னா் நடைபெற்ற வன்முறையில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் ஓட்டுநா், இரண்டு பாஜக தொண்டா்கள், ஒரு பத்திரிகையாளா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பான கேள்விக்கு விவசாயிகளின் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் ராகேஷ் திகைத் பதிலளிக்கையில், ‘நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றியதற்கு பதிலடியாகவே போராட்டக்காரா்கள் இரண்டு பாஜக தொண்டா்களை கொலை செய்துள்ளனா். ஆகையால், அவா்களை குற்றவாளிகளாக கருத முடியாது’ என்றாா்.

சம்யுக்த விவசாயிகள் சங்கத்தின் தலைவா் யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘உயிரிழந்தவா்கள் பாஜக தொண்டராக இருந்தாலும், விவசாயிகளாக இருந்தாலும் வருத்தமாக உள்ளது.

இது துரதிருஷ்டவசமான சம்பவம். இதில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். மத்திய உள்துறை இணையமைச்சா் அஜ்ய மிஸ்ராவும் இந்த வன்முறை சம்பவம் ஏற்பட காரணமாக உள்ளாா். ஆகையால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com