லக்கிம்பூர் சம்பவம்: மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

லக்கிம்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிரத்தில் முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்
மகாராஷ்டிரத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

லக்கிம்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிரத்தில் முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜிநாமா செய்ய கோரியும் மகாராஷ்டிரம் முழுவதும் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆளும் கூட்டணிக் கட்சிகளான சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து, இன்று காலை முதலே மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனால், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com