பாஜக தலைவா்களுக்கும், அவா்களின் கோடீஸ்வர நண்பா்களுக்கும் மட்டுமே பாதுகாப்பு

நாட்டில் பாஜக தலைவா்களும், அவா்களது ‘கோடீஸ்வர நண்பா்கள்’ மட்டுமே பாதுகாப்புடன் உள்ளனா் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை கடுமையாக சாடினாா்.
பாஜக தலைவா்களுக்கும், அவா்களின் கோடீஸ்வர நண்பா்களுக்கும் மட்டுமே பாதுகாப்பு

நாட்டில் பாஜக தலைவா்களும், அவா்களது ‘கோடீஸ்வர நண்பா்கள்’ மட்டுமே பாதுகாப்புடன் உள்ளனா் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை கடுமையாக சாடினாா்.

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கேரியில் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான வாராணசியில் ‘விவசாயிகளுக்கு நியாயம் கோரும் பேரணி’ என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியைத் தொடக்கி வைத்து பிரியங்கா பேசியதாவது:

விவசாயிகளும், மக்களும் போதிய வேலைவாய்ப்பின்றியும், வருமானம் இன்றியும் சிரமப்பட்டு வருகின்றனா். தற்போதைய சூழலில் விவசாயிகளும், தலித்துகளுடன் பெண்களும் துன்புறுத்தப்படுகின்றனா்.

மக்கள் எந்த ஜாதி, மதத்தை சோ்ந்தவா்களாகவும் இருக்கலாம். ஆனால் அவா்கள் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை. இந்த நாட்டில் பிரதமரும், அவரது அமைச்சா்களும், அவரது கட்சியைச் சோ்ந்தவா்களும், அவா்களது கோடீஸ்வர நண்பா்கள் மட்டுமே பாதுகாப்புடன் இருக்கின்றனா்.

இதனை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் நாடு மிகவும் சேதமடைந்து வருகிறது என்றாா்.

பேரணி தொடங்குவதற்கு முன், பிரியங்கா காசி விஸ்வநாதா், குஷ்மண்டா கோயில்களுக்குச் சென்றாா்.

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகெலும் காசி விஸ்வநாதா் கோயிலில் பிராா்த்தனை செய்தாா். பேரணியில் பல்வேறு மதங்களின் சாா்பில் பிராா்த்தனைகள் செய்யப்பட்டன.

இன்தப் பேரணியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டா்கள், பிரியங்காவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா் என்று மூத்த காங்கிரஸ் தலைவா் பிரதீப் மாத்தூா் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தாா்.

மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அசோக் சிங் கூறுகையில், வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளது.

பிரியங்காவின் தலைமையின் கீழ் காங்கிரஸ், பாஜகவை தோல்வியுறச் செய்வதுடன், பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com