பெட்ரோல் நிலையங்களில் சிஎன்ஜி, மின் வாகன சாா்ஜிங் வசதி: மத்திய அரசு புதிய நடைமுறை

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் - டீசல் விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) மற்றும் மின் வாகன மின்னேற்றி
பெட்ரோல் நிலையங்களில் சிஎன்ஜி, மின் வாகன சாா்ஜிங் வசதி: மத்திய அரசு புதிய நடைமுறை

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் - டீசல் விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) மற்றும் மின் வாகன மின்னேற்றி (சாா்ஜிங்) வசதிகளை அமைப்பதற்கு புதிய தாராளமய பெட்ரோல் நிலைய உரிம நடைமுறை அனுமதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில், மின் வாகன பயன்பாடு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பெட்ரோல் நிலையங்கள் அமைக்க விரும்பும் புதிய நிறுவனங்களுக்கு விதிமுறைளை எளிதாக்கி கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து விளக்கமளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம், ‘பெட்ரோல் - டீசல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் நிலையங்களிலேயே, புதிய தலைமுறை எரிபொருள்களான சிஎன்ஜி, என்என்ஜி அல்லது மின் வாகன மின்னேற்றி நிலயங்களை அமைக்கலாம்’ என்று தெரிவித்தது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல்-டீசல் எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் சில்லறை விற்பனையகங்களில் ஏதாவதொரு புதிய தலைமுறை எரிவாயு நிலையத்தை அமைப்பது கட்டாயம்’ என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், இந்த புதிய தலைமுறை எரிபொருள் நிலையங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதனை தெளிவுபடுத்தும் வகையில், புதிய தாராளமய பெட்ரோல் நிலைய உரிம நடைமுறையை மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ளது. அந்த நடைமுறையின்படி, குறைந்தபட்சம் ரூ. 250 கோடி நிகர மதிப்புள்ள எந்தவொரு நிறுவனமும் பெட்ரோல்-டீசல் சில்லறை விற்பனை உரிமம் கேட்டு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு புதிதாக தொடங்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் - டீசல் விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎன்ஜி, மின் வாகன மின்னேற்றி நிலையங்களை அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் புதிய நடைமுறை அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com