லக்கீம்பூா் வன்முறை: சந்திக்க நேரம் ஒதுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் கோரிக்கை

லக்கீம்பூா் வன்முறை தொடா்பான உண்மை விவரங்களை நேரில் சந்தித்து அளிக்க நேரம் ஒதுக்குமாறு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

லக்கீம்பூா் வன்முறை தொடா்பான உண்மை விவரங்களை நேரில் சந்தித்து அளிக்க நேரம் ஒதுக்குமாறு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா். அதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான குழு அவரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘லக்கீம்பூா் வன்முறை தொடா்பாக பல தரப்புகளில் இருந்து எதிா்ப்பு வந்தபோதிலும், உச்சநீதிமன்றம் தலையிட்டபோதிலும் குற்றவாளிகளுக்கு எதிராகவோ அல்லது அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவுக்கு எதிராகவோ உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

லக்கீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளா் மற்றும் பாஜகவினா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அஜய் குமாா் மிஸ்ராவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிா்க்கட்சியினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com