'தேடவேண்டாம்' என எழுதிவைத்துவிட்டு மாயமான 7 பேரில் 3 பெங்களூரு சிறார்கள் மீட்பு

பெங்களூருவில், தங்களை தேட வேண்டாம் என்று பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான 7 பேரில் 3 சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
'தேடவேண்டாம்' என எழுதிவைத்துவிட்டு மாயமான 7 பேரில் 3 பெங்களூரு சிறார்கள் மீட்பு
'தேடவேண்டாம்' என எழுதிவைத்துவிட்டு மாயமான 7 பேரில் 3 பெங்களூரு சிறார்கள் மீட்பு


பெங்களூருவில், தங்களை தேட வேண்டாம் என்று பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான 7 பேரில் 3 சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவேறு சம்பவங்களில் காணாமல் போன 7 பேரில் 6 பேர் சிறார்கள். இது குறித்து இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பெங்களூருவில் 10 வகுப்பு பயிலும் 15 வயதுடைய  3 சிறார்கள், தங்களது குடும்பத்தார் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் சனிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இரவு வரை வீடு திரும்பாததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 3 பேரில் இரண்டு பேர் தங்களது குடும்பத்தாருக்கு கைப்படி கடிதம் எழுதியுள்ளனர். அதில், எங்களுக்கு படிப்பில் ஆர்வமில்லை. விளையாட்டில் ஜொலிக்கவே விரும்புகிறோம். கபடி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு நல்ல பெயர் மற்றும் பணம் சம்பாதிக்க விரும்புகிறோம். எனவே எங்களைத் தேட வேண்டாம் என்று எழுதி வைத்திருப்பதாக வடக்கு பெங்களூரு காவல்துறை துணை ஆணையர் தர்மேந்திர குமார் மீனா தெரிவித்துள்ளார்.

காணாமல் போன சிறார்களில் ஒருவரின் தந்தை கூறுகையில், வழக்கமாக காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வது போலத்தான் புறப்பட்டான். ஆனால் வீடுதிரும்பவில்லை. கையில் பணமோ, துணியோ எடுத்துச் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

இதேப்போல, சோல்தேவன்ஹல்லி காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் 4 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 3 பேர் 12 வயதுடையவர்கள். ஒருவர் கல்லூரி மாணவர். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இவ்விரு சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இவர்கள் ஒரே நேரத்தில் மாயமாகியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com