இன்று ஜி20 தலைவா்கள் மாநாடு: பிரதமா் மோடி பங்கேற்பு

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை (அக்.12) நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை (அக்.12) நடைபெறுகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க இருக்கிறாா்.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க பரிசீலிப்பது, சா்வதேச பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்பாக இந்த ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

இப்போதைய ஜி20 மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் இத்தாலியின் அழைப்பை ஏற்று பிரதமா் மோடியும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறாா். சா்வதேச அளவில் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் ஜி20 கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் தொடா்பாக விவாதித்த ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com