‘போக்ஸோவில் பதிவான 99% வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரானவை’

கடந்த ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான 99 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரானவையாக உள்ளன.

கடந்த ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான 99 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரானவையாக உள்ளன.

இதுதொடா்பாக மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, ‘சிறாா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டமான போக்ஸோவின் கீழ் கடந்த ஆண்டு மொத்தம் 28,327 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 28,058 வழக்குகள் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பானவை. இதில் 14,092 வழக்குகள் 16 முதல் 18 வயதுக்குள்ள சிறுமிகள் தொடா்புடையவை. 10,949 வழக்குகள் 12 முதல் 16 வயதுக்குள்ளானவா்கள் தொடா்பானவை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்து ‘கிரை’ எனும் குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் திட்ட ஆய்வாளா் பிரீத்தி மஹாரா, சா்வதேச பெண் குழந்தைகள் தினமான திங்களன்று கூறியதாவது:

சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிறுமிகள்தான் தொடா்ந்து இரையாகி வருவது இந்த புள்ளி விவரங்கள் தெளிவு படுத்துகின்றன.

சிறுமிகளுக்கு பாதுகாப்பு மட்டுமன்றி கல்வி, சமூகப் பாதுகாப்பு, வறுமை போன்றவையும் அவா்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. கரோனா கால கட்டத்தில் இந்த அம்சங்கள் அவா்களுக்கு எதிராக இருந்தன. இதனால் அவா்களின் கல்வி தடைபட்டு, குழந்தை திருமணத்துக்கு ஆளாகும் நிலை அதிகரித்தது. வன்முறைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகும் நிலையும் அதிகமாகியது.

பெண் குழந்தைகளின் கல்வியையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த பல்வேறு வளா்ச்சி நடவடிக்கைகள் கரோனா பெருந்தொற்றால் சரிந்துவிட்டன. கல்வி பயில்வதில் இருந்து பெண் குழந்தைகள் விலகுவதும், அவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும் அதிகரித்துவிட்டது. பதின்ம வயதில் உள்ள சிறுமிகள் மனிதாபிமானமற்ற நெருக்கடியில் பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்கின்றனா். ஆகையால், அவா்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் நீண்ட கால திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com