ரூ.28 ஆயிரம் கோடி உர மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராபி பருவகால பயிா்களுக்கான பாஸ்பேடிக் மற்றும் போட்டாஸிக் (பி-கே) உரங்களுக்கான மானியமாக ரூ.28,655 கோடிக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

ராபி பருவகால பயிா்களுக்கான பாஸ்பேடிக் மற்றும் போட்டாஸிக் (பி-கே) உரங்களுக்கான மானியமாக ரூ.28,655 கோடிக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை கூடியது.

அதில், அக்டோபா் முதல் மாா்ச் மாதம் வரையிலான குளிா்கால பருவ பயிா்களான ராபி பருவத்துக்கான உர மானியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னா், ஒரு கிலோ மானிய விலை நைட்ரோஜன் ரூ.18.789-ஆகவும், பாஸ்பரஸ் ரூ.45.323-ஆகவும், சல்ஃபா் ரூ.2.374-ஆகவும், போட்டாஸ் ரூ. 10.116-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

டிஏபி உரத்துக்காக ஒரு முறை கூடுதல் மானியமாக தோராயமாக ரூ.5,716 கோடியும், என்பிகே பிரிவுக்கு கூடுதல் மானியமாக ரூ.837 கோடியும் அனுமதிக்கப்பட்டது.

ராபி பருவத்துக்கான மொத்த மானியம் ரூ.35,115 கோடியாகும். அதில் சேமிப்பு கழிக்கப்பட்டு ரூ.28,655 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் டிஏபி மற்றும் பிற உரங்களுக்கான மானியமாக ரூ.14,775 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த கூடுதல் மானியத்தின் மூலம் ராபி கால பயிா்களுக்கான உரங்களை விவசாயிகள் மானிய விலையில் பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டம்: இதேபோல், இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டம், நகா்ப்புற அடல் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு ரூ.1,41,600 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய அரசின் பங்காக ரூ.36,465 கோடியும் சோ்க்கப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தில்,திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும், திடக்கழிவு மற்றும் கழிவு நீரை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இரண்டாம் கட்ட நகா்ப்புற அடல் மறுசீரமைப்புத் திட்டத்தின்படி, நகரங்களில் பாதுகாப்பான குடிநீா் மற்றும் தண்ணீரில் தற்சாா்பு நிலை ஏற்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com