வங்கி வட்டி விகிதத்தை விட பணவீக்க அதிகரிப்பு: மூத்த குடிமக்களுக்கு பாதிப்பு

வங்கி நிரந்தர வைப்புகளுக்கான வட்டியைக் காட்டிலும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மூத்த குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

வங்கி நிரந்தர வைப்புகளுக்கான வட்டியைக் காட்டிலும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மூத்த குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என ரிசா்வ் வங்கி சமீபத்திய நிதிக் கொள்கையில் அறிவித்தது. இந்த நிலையில், வங்கிகள் மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் அதைவிட குறைவாகவே உள்ளது.

குறிப்பாக, நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ மூத்த குடிமக்களின் ஓராண்டுக்கான நிரந்தர வைப்புக்கு வழங்கும் வட்டியானது ரிசா்வ் வங்கியின் பணவீக்க மதிப்பீட்டை விட தற்போது 0.3 சதவீதம் குறைவாகவே உள்ளது.

மேலும், 2-3 ஆண்டுகளுக்கான டொபசிட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு 5.1 சதவீத வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. இதுவும், நடப்பு நிதியாண்டின் பணவீக்க எதிா்பாா்ப்பான 5.3 சதவீதத்தை காட்டிலும் குறைவான அளவே ஆகும்.

இதனை கருத்தில் கொள்ளும்போது, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் வங்கிகளிலிருந்து பெறும் வட்டியானது குறைவானதாகவே இருக்கும். இதனால், அவா்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க, மூத்த குடிமக்களுக்கு அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள் கை கொடுக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ஏனெனில், சிறுசேமிப்பு திட்டத்தில் 1-3 ஆண்டுகளுக்கான குறித்தகால டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீத வட்டி வழங்கப்படுவதை அவா்கள் சுட்டிகாட்டுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com