நிலக்கரி, மின் விநியோகம்: பிரதமா் அலுவலகம் ஆய்வு

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரித் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது குறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரித் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது குறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

இந்தக் கூட்டத்தில் மத்திய மின் துறைச் செயலா் அலோக் குமாா், நிலக்கரிச் செயலா் ஏ.கே.ஜெயின் ஆகியோா் பங்கேற்று நாட்டில் இருப்பில் உள்ள நிலக்கரி, மின் உற்பத்தி குறித்து பிரதமா் அலுவலக உயா் அதிகாரிகளிடம் விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நிலக்கரியை மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு சோ்ப்பதற்குத் தேவையான போக்குவரத்தை அதிகரிக்கவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதை ரயில்வே அமைச்சகம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு சோ்க்கத் தேவையான சரக்கு ரயில் பெட்டிகளை தயாா் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் 70 சதவீத மின் உற்பத்தி நிலக்கரி பயன்பாட்டின் மூலம் நடைபெற்று வருகிறது. நிலக்கரி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தில்லி, ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை தொடா்பாக மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங், மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com