தேச பிரிவினையை முதன்முதலில் பரிந்துரை செய்தவர் சாவர்க்கர்: காங்கிரஸ் பதிலடி

காந்தியடிகள் கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னுப்பு கடிதம் எழுதியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

காந்தியடிகள் கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னுப்பு கடிதம் எழுதியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததிருந்தார். இதை பல்வேறு தரப்பினர் கடுமையாக விமரிசித்துவருகின்றனர்.

இந்நிலையில், தேச பிரிவினையை முதன்முதலில் பரிந்துரை செய்தவரே சாவர்க்கர்தான் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் விமரிசித்துள்ளார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், "மகாத்மா காந்தி வர்தா சிறையிலும், சாவர்க்கர் செல்லுலார் சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்கள் எவ்வாறு தொடர்பு கொண்டிருப்பார்கள்? சாவர்க்கர் சிறையில் இருந்து பலமுறை கருணை மனு தாக்கல் செய்தார்.

அந்த சமயத்தில் சாவர்க்கர் தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தார். நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் அவர்களுக்கு உதவி செய்தார். 1925 இல் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தேச பிரிவினை கோட்பாட்டை முதலில் பரிந்துரைத்தவர் சாவர்க்கர்தான்" என்றார்.

முன்னதாக, 'வீர் சாவர்க்கர்: தி மேன் வூ குட் ஹாவ் பிரிவேன்டட் பார்ட்டிசன்' என்ற புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், "சாவர்க்கர் பற்றி பொய்கள் பரப்பப்பட்டது. சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் ஆங்கிலேயே அரசிடம் கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. மகாத்மா காந்தி தான் கருணை மனு தாக்கல் செய்யும்படி அவரிடம் கூறினார்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com