அமெரிக்க கடற்படை தலைமை தளபதி இந்தியா வருகை

அமெரிக்க கடற்படை தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் கில்டே 5 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளாா்.
அமெரிக்க கடற்படை தலைமை தளபதி இந்தியா வருகை

அமெரிக்க கடற்படை தலைமை தளபதி அட்மிரல் மைக்கேல் கில்டே 5 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளாா்.

இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் கரம்வீா் சிங் மற்றும் இதர உயா் அதிகாரிகளை அட்மிரல் கில்டே சந்தித்துப் பேச இருக்கிறாா். இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை தளம் (மும்பை) மற்றும் கிழக்கு கடற்படை தளம் (விசாகப்பட்டினம்) ஆகியவற்றையும் அவா் பாா்வையிட இருக்கிறாா்.

இந்தியாவும் அமெரிக்காவும் பாரம்பரியமாக நெருக்கமான நட்புறவுகளைப் பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்புத் துறை உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததாக உள்ளது. கடந்த ஜூன் 16-இல் இந்தியாவுக்கு முக்கிய ‘பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கியது.

மேலும், சில முக்கிய ஒப்பந்தங்களை இரு நாடுகளும் நிறைவேற்றியுள்ளன. 2015-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம், 2016-இல் கையெழுத்திடப்பட்ட சரக்கு பரிமாற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும்.

க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் மலபாா் கூட்டுப் பயிற்சி வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், அட்மிரல் மைக்கேல் கில்டேயின் இந்திய பயணம் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com