ராகுல் காந்தி
ராகுல் காந்தி

‘நியாயமான விசாரணைக்கு மத்திய அமைச்சரை பதவி நீக்க கோரினோம்’: ராகுல் காந்தி

லக்கிம்பூர் வன்முறையில் நியாயமான விசாரணை மேற்கொள்ள மத்திய இணையமைச்சரை பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம்

லக்கிம்பூர் வன்முறையில் நியாயமான விசாரணை மேற்கொள்ள மத்திய இணையமைச்சரை பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் ராகுல் பேசுகையில்,

பலியான விவசாயிகளின் குடும்பத்தினர் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என கூறிகின்றனர். அவர்களின் கருத்தை குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம். எங்களின் குரல் இந்திய விவசாயிகளின் குரல்.

குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் தந்தை மத்திய இணையமைச்சராக உள்ளார். இந்நிலையில், நியாயமான விசாரணைக்கு சாத்தியமில்லை என்பதால், அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வன்முறையில் நியாமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரியும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி மனு அளித்தார்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com