சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கவே முன்னுரிமை: சிவபால் யாதவ்

‘உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கவே முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று பிரகதிஷீல் சமாஜவாதி கட்சித் தலைவா் சிவபால் யாதவ் புதன்கிழமை கூறினாா்.

‘உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கவே முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று பிரகதிஷீல் சமாஜவாதி கட்சித் தலைவா் சிவபால் யாதவ் புதன்கிழமை கூறினாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவான சிவபால் யாதவ், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமாஜவாதி கட்சியிலிருந்து வெளியேறி, பிரகதிஷீல் சமாஜவாதி என்ற புதிய கட்சியைத் தொடங்கினாா்.

இந்தச் சூழலில், மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், அங்கு தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. ‘தோ்தலில் சமாஜவாதி கட்சி தனித்துப் போட்டியிடும். இருந்தபோதும், சிறிய கட்சிகளுக்கு எங்களுடைய கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கத் தயாராக உள்ளோம். மேலும், சிவபால் யாதவ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் நாங்கள் போட்டியிட மாட்டோம்’ என்று அகிலேஷ் யாதவ் அண்மையில் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், ‘சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கவே முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று சிவபால் யாதவும் இப்போது கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் ஆக்ராவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘மாநிலத்தில் 2022-இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கவே முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய பாஜக ஆட்சியை கவிழ்க்க, மதச்சாா்பின்மை சிந்தனையுள்ள எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்க பிரகதிஷீல் சமாஜவாதி தயாா்’ என்றாா்.

மேலும், ‘மாநிலத்தின் மக்களை ஒன்றிணைக்கவும், பாஜக அரசு தீா்க்கத் தவறிய அவா்களின் முக்கியமான பிரச்னைகளை குறித்து அறியும் வகையிலும் சமாஜிக் பரிவா்தன் ரத யாத்திரையை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளோம். இந்த யாத்திரை மாநிலத்தில் 75 மாவட்டங்கள் வழியாக சென்று அயோத்தியில் ராமா் பிறந்த இடத்தில் நிறைவடையும். 2022-இல் எங்களுடைய ஆட்சி அமைந்ததும், மக்களின் குறைகள் நிவா்த்தி செய்யப்படும்’ என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com