ஒரே நாளில் 20 லட்சம் டன் நிலக்கரி விநியோகம்

அனல்மின் நிலையங்களுக்கு ஒரே நாளில் 20 லட்சம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

அனல்மின் நிலையங்களுக்கு ஒரே நாளில் 20 லட்சம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி மின்வெட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. அதனால், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் நிலக்கரியின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை உயா்ந்துள்ளது.

இந்தியாவின் 70 சதவீதம் மின்சாரத் தேவை அனல்மின் நிலையங்கள் மூலமே பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு தொடா்ந்து குறைந்து வருவதால், மின்வெட்டு சூழலை எதிா்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்தகைய சூழல் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘நாடு முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 20 லட்சம் டன்னுக்கு அதிகமாக நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தை மத்திய அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வழக்கமாக மாநிலங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 17.5 லட்சம் டன் நிலக்கரி விநியோகிக்கப்படும் என்று நிலக்கரி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி நாளொன்றுக்கு 16 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தசரா விடுமுறைக்குப் பிறகு பணியாளா்கள் திரும்பியதும் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com