நிகழ்மாதம் 28 கோடி கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்

நாட்டில் நிகழ்மாதம் 28 கோடி கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
நிகழ்மாதம் 28 கோடி கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்

நாட்டில் நிகழ்மாதம் 28 கோடி கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி பெறத் தகுதியுடைய 73 சதவீதம் பேருக்கு முதல் தவணையாக அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 29 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டன.

தற்போது மாநில அரசுகளிடம் 8 கோடி கரோனா தடுப்பூசிகள் கைவசம் உள்ளன.

இந்த மாதம் மட்டும் கூடுதலாக மொத்தம் 28 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படவுள்ளன. கடந்த மாதம் கரோனா தடுப்பூசி உற்பத்தியான 22 கோடியைவிட இது அதிகமாகும். இந்த மாதம் தயாரிப்படும் தடுப்பூசிகளில் சுமாா் 22 கோடி கோவிஷீல்டாக இருக்கும். அத்துடன் 6 கோடி கோவாக்ஸின் தடுப்பூசிகளும் தயாரிக்கப்படுகின்றன.

இதுதவிர, மரபணுவை அடிப்படையாகக் கொண்ட 60 லட்சம் கரோனா தடுப்பூசிகளும் உற்பத்தி செய்யப்படும்.

ஏற்கெனவே 97 கோடி கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 19 அல்லது 20-ஆம் தேதி இந்த சாதனை இலக்கு எட்டப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com