கோவா தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம்; கணக்கு போடும் சிதம்பரம்

அடுத்தாண்டு நடைபெறவுள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலிலும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் (கோப்புப்படம்)
சிதம்பரம் (கோப்புப்படம்)

அடுத்தாண்டு நடைபெறவுள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலிலும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கோவா தேர்தல் பொறுப்பாளரான சிதம்பரம், பனாஜியில் தேர்தல் அலுவலகங்கத்தை தொடங்கி வைத்து தொண்டர்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "வரலாற்றிலிருந்து ஒரு விஷயம் சொல்கிறேன். கோவாவை வென்றவர்கள்தான் தில்லியை வென்றுள்ளனர். 2007ல் நாங்கள் கோவாவை வென்றோம். 2009ல் நாங்கள் தில்லியை வென்றோம். 2012ல், துரதிருஷ்டவசமாக கோவாவை இழந்தோம், 2014 ல் தில்லியை இழந்தோம். 2017இல், நீங்கள் (கட்சிப் பணியாளர்களைக் குறிப்பிட்டு) கோவாவை வென்றீர்கள். 

இருப்பினும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவாவை இழந்தனர். இம்முறை, தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் கட்சி முன்னோக்கி செல்கிறது. 2022ஆம் ஆண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் வென்று, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று தில்லியை கைப்பற்றுவோம். வரலாறு நம்முடையது. நாம் இன்று ஒரு நல்ல நாளில் தொடங்குகிறோம். 

எங்கள் அலுவலகத்தை ஒரு மதிப்புமிக்க அரசியல்வாதியும் முன்னாள் முதல்வருமான பிரதாப்சிங் ராணே திறந்து வைத்துள்ளார். தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் போன்ற துறைகளில் கோவா முன்னேறி வளர்ந்த பொன்னான காலத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

2022 ஆம் ஆண்டிலிருந்து கோவாவின் அந்த பொற்காலத்தை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். நீங்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேற விரும்புகிறேன்.

கோவாவை எந்த ஆக்கிரமிப்பாளரின் அரசியல் காலனியாகவும் மாற்ற முடியாது. கோவாவை கோவா மக்களே நிர்வகிப்பார்கள். கோவாவை கோவா மக்களால் கோவா மக்களுக்காக கோவா மக்களே தேர்ந்தெடுப்பார்கள். கோவா மக்களே கோவாவை ஆட்சி செய்வார்கள்" என பதிவிட்டுள்ளார். 

கோவாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ ஃபலேரோ அக்கட்சியிலிருந்து விலக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com