ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்‍கு 6வது முறையாக தலைமை தாங்கும் இந்தியா!

ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் கவுன்சிலுக்‍கு 6 ஆவது முறையாக தலைமை தாங்கும் பொறுப்பை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது.
2022-24 ஆம் ஆண்டிற்கான ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா பொதுசபையில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
2022-24 ஆம் ஆண்டிற்கான ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா பொதுசபையில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் கவுன்சிலுக்‍கு 6 ஆவது முறையாக தலைமை தாங்கும் பொறுப்பை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது.

ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கவுன்சில், ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கமாக விளங்குகிறது. இதில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. மனித உரிமை கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் மூன்று ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும்.

இந்த நிலையில் இந்தியாவின் தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 31, 2021 இல் முடிவடைய இருந்த நிலையில், 2022-24 ஆம் ஆண்டிற்கான ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா பொதுசபையில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், இந்தியா பல்வேறு நாடுகளின் பெரும் ஆதரவுடன் மீண்டும் 6 ஆவது முறையாக தேர்ந்தெடுக்‍கப்பட்டுள்ளது. 

193 உறுப்பு நாடுகளில், தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க 184 நாடுகள் ஆதரவு அளித்து வாக்களித்துள்ளன. 97 வாக்குகள் பெற்றாலே, தலைமை தாங்க முடியும் என்ற நிலையில் அதிகயளவு பெரும்பான்மை பலத்துடன் இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. 

ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்குவதற்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றில் நமது வலுவான நிலையை உறுதிப்படுத்துகிறது. உலக நாடுகள் இந்தியாவின் மீது வைத்திருக்‍கும் நம்பிக்‍கையை இது கட்டுவதாகவும், உலக அளவில் மனித உரிமைகளை நிலைநாட்ட இந்தியா எப்போதும் உறுதியாகப் போராடும் என்றும். இந்தியாவுக்கு ஆதரவளித்த அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com