Enable Javscript for better performance
மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது

    By DIN  |   Published On : 16th October 2021 03:18 AM  |   Last Updated : 16th October 2021 03:18 AM  |  அ+அ அ-  |  

    Manmohan Singh admitted to AIIMS, Delhi for evaluation of fever his condition is stable: officials

    கோப்புப்படம்

    காய்ச்சலால் ஏற்பட்ட உடல்சோா்வு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் (89) உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மன்மோகன் சிங்கின் உடல்நிலை முன்பு இருந்ததைவிட இப்போது மேம்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடா்பாக தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அவா் முழுஉடல் நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

    மன்மோகன் சிங்குக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவா், உடல் சோா்வாக இருப்பதாக தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடா்பான பரிசோதனையும் அவருக்கு நிபுணா்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்போது, அவரது உடல்நிலை சீராகவும், முன்பைவிட மேம்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் மன்மோகன் சிங்கை வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனா்.

    கடந்த ஏப்ரலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மன்மோகன் சிங்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா நேரில் சந்தித்து நலம் விசாரித்த படம் ஊடகங்களில் வெளியானது. புகைப்படம் வெளியானதில் மன்மோகன் சிங்கின் மனைவி அதிருப்தி தெரிவித்துள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp