பருவநிலை மாற்றம் தொடர்பாக ஒதுக்கப்படும் நிதி; முக்கியமான கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன்

பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் இந்தியா அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் நிதி ஒதுக்கீடு செய்தவற்கான வழிமுறை குறித்தும் தொழில்நுட்ப பகிர்வு குறித்தும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி அலுவலகங்களில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர், வாஷிங்டனின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரிஸில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாநாட்டின்போது 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழி எப்படி நீட்டிக்கப்பட்டது என்பதில் எனக்கு தெளவு இல்லை. கூட்டத்தில், நானும் ஒரு விவகாரத்தை எழுப்பினேன். அதை பலரும் கருத்தில் எடுத்து கொண்டார்கள்.

அதாவது, பருவநிலை மாற்றம் தொடர்பாக எவரேனும் நிதி செலவழித்தால் அது இந்த 100 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தின் கீழ் வருமா என்பது எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து செலவிடப்படும் பணம் குறித்து கண்காணிக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

100 பில்லியன் அமெரிக்க டாலர்களை யாரெல்லாம் தருகிறார்கள். உண்மையாகவே, 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளதா அல்லது குறிப்பிட்ட தொகை மட்டும் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஏதேனும் வழிமுறை உள்ளதா? ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருகிறதா இல்லையா என்பது மட்டும் பிரச்னை இல்லை. அப்படி வரும் பணத்தை எப்படி அளவிட போகிறோம் என்பதும் பிரச்னைதான்.

சர்வதேச நிதியம், உலக வங்கி கூட்டங்களில் பலர் இந்த பிரச்னையை எழுப்பினார்கள். எனவே, நிதி அளிப்பது பல நாடுகளுக்கு பிரச்னை தரும் விவகாரமாகவே உள்ளது. அதேபோல், தொழில்நுட்ப பகிர்வும் பிரச்னைக்குரிய விவகாரமாக உள்ளது. நிதி அளிப்பதில் பிரச்னை இருப்பது போலவே, எந்த தொழில்நுட்பத்தை பிகிர்கிறோம் என்பதிலும் பிரச்னை உள்ளது. இதுகுறித்த விவாதத்தில் எதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என நமக்கு தெரியுமா? 

இதில், நான் திருப்தி அடையவில்லை என சொல்லமாட்டோன். ஏனெனில், இந்தியா அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆறு நாடுகள் மட்டுமே அளித்த உறுதிமொழிகளை செயல்படுத்தியுள்ளது. ஒரு படி தாண்டி சென்று, இதைத்தான் செய்தோம் என்பதைக் தெரிவிக்க இந்தியா ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. 2030க்குள் எதை சாதிக்க வேண்டுமோ அதை ஏற்கனவே சாதித்து விட்டோம். கிட்டத்தட்ட சாதித்து விட்டோம்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com