தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரைவிட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

ஜம்மு - காஷ்மீரில் சமீபகாலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் எழுந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரைவிட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்திய - பாகிஸ்தான் எல்லைகளை கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு அஞ்சி சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் கூறுகையில்,

“ஜம்மு - காஷ்மீர் சூழ்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாங்கள் குழந்தைகளுடன் தங்கியுள்ளதால், எங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்புகிறோம் என்றார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com