நாட்டில் 231 நாள்களுக்குப் பின் குறைவாக பதிவான கரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 13,058 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இது 231 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த கரோனா பாதிப்பாகும்.
நாட்டில் 231 நாள்களுக்குப் பின் குறைவாக பதிவான கரோனா தொற்று
நாட்டில் 231 நாள்களுக்குப் பின் குறைவாக பதிவான கரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 13,058பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இது 231 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த கரோனா பாதிப்பாகும்.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 13,058 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,40,94,373 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 164 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,52,454 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,83,118 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது 227 நாள்களுக்குப் பிறகு குறைவான எண்ணிக்கையாகும்.

மேலும் 19,470 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை மொத்தம் 3,34,58,801 பேர் குணமடைந்துள்ளனர்.  நாட்டில் இதுவரை மொத்தம் 98,67,69,411 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com