ராகுல் காந்தி குறித்து அவதூறு கருத்து கூறிய பாஜக; அறிவுரை சொன்ன காங்கிரஸ்

ராகுல் காந்தி போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டில் தெரிவித்திருந்தார்.
டி கே சிவகுமார் (கோப்புப்படம்)
டி கே சிவகுமார் (கோப்புப்படம்)

பிரதமர் மோடி குறித்து ட்விட்டரில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவகுமார் நேற்று வருத்தம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ராகுல் காந்தி போதைப் பொருளுக்கு அடிமையானவர் என கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்ததற்கு சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சயின் சமூக வலைதள பக்கத்தின் நிர்வாகி மோடி குறித்து துரதிருஷ்டவசமாக பதிவிட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுவிடடேன் என்றும் அதேபோல் ஆளும் கட்சியும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிவகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவகுமார் விரிவாக பேசுகையில், "அரசியலில் எதிரிகளை கூட நாகரிகமாகவும் மரியாதையாகவும் நடத்த  வேண்டும் என நான் நேற்றே சொன்னேன். பாஜக என்னுடன் உடன்படும் என்று நம்புகிறேன். ராகுல் காந்திக்கு எதிராக உங்கள் மாநிலத் தலைவர் தவறாகவும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை கொண்டு விமரிசித்துள்ளார்" என்றார்.

ராகுல் காந்தி போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்திருந்த நிலையில், சிவகுமார் இப்படி விமரிசனம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக வருவது குறித்து ராகுல் காந்தி பரிசீலனை செய்வதாக காங்கிரஸ் செயற்குழுவில் கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது.

இதை விமரிசித்த நளின் குமார் கட்டீல், "சோனியா காந்தி தலைவர் அல்ல என்று உங்கள் அதிருப்தி தலைவர்கள் கூறுகிறார்கள். சோனியா காந்தியோ, தான் தான் தலைவர் என்று கூறுகிறார். மறுபுறம், ராகுல் காந்தி, தலைவராக வருவேன் என்று கூறுகிறார். யார் இந்த ராகுல் காந்தி என்று சொல்லுங்கள்? ராகுல் காந்தி போதைக்கு அடிமையானவர். போதைப்பொருள் விற்பவர். நான் இதைச் சொல்லவில்லை, செய்திகளில் வெளிவந்துள்ளது. 

அவரால் கட்சியை கூட வழிநடத்த முடியவில்லை. கட்சியை கூட வழி நடத்த முடியாத ஒருவரால் நாட்டை எப்படி வழி நடத்த முடியும். அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டது. அவர்கள் பிரதமருக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை இந்திய மக்கள் மட்டும் நேசிக்கவில்லை, அமெரிக்க அதிபரும் கூட மதிக்கிறார்" என்றார்.

இதற்கு பதிலடி அளித்த காங்கிரஸ், பிரதமர் மோடியை படிப்பறிவற்றவர் எனக் குறிப்பிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com