பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கூடாது: மத்திய அமைச்சா் அதாவலே

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளாா்.
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கூடாது: மத்திய அமைச்சா் அதாவலே

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளாா்.

இருபது ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 24-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெறவுள்ள நிலையில் மத்திய அமைச்சா் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அவா் புணேயில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளா்களையும், பண்டிட்களையும் பயங்கரவாதிகள் தொடா்ந்து சுட்டுக்கொலை செய்து வருகின்றனா். இது பாகிஸ்தானின் தூண்டுதலுடன் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் நாம் பாகிஸ்தானுக்கு எதிராக உடனடியாகத் துல்லியத் தாக்குதல் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகளின் முகாமாகத் திகழும் ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுமையாக காலி செய்யப்பட வேண்டும். அதன் மூலம் அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராகத் தூண்டப்படும் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.

இருபது ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது. எனது இந்தக் கருத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலா் ஜெய் ஷாவிடம் வலியுறுத்துவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com