பிரியங்கா காந்தி மீண்டும் கைது

உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் காவலில் பலியான தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பிரியங்கா காந்தி மீண்டும் கைது
பிரியங்கா காந்தி மீண்டும் கைது

உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் காவலில் பலியான தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

ஆக்ரா அருகே கடந்த அக்.17ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவரை ரூ. 25 லட்சம் திருடுப் போன வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், தான் திருடியதை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது வீட்டை சோதனை செய்ததில் ரூ. 15 லட்சம் கைப்பற்றப்பட்டது. அப்போது தூய்மைப் பணியாளருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் காவலில் தூய்மைப் பணியாளரை காவலர்கள் அடித்ததால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பிரியங்கா காந்தியின் வாகன அணிவகுப்பையும் அவரையும் உ.பி. காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து ஆக்ராவுக்கு செல்ல முயன்றதால் பிரியங்கா காந்தியை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ஆக்ராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தியை அனுமதிக்க முடியாது. அவரை தடுப்புக் காவலில் வைக்கவுள்ளோம்.”

இம்மாத தொடக்கத்தில் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com