வெள்ளை மாளிகை பணியில்3 இந்திய அமெரிக்கா்கள்

அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையில் பயிற்சி உதவியாளா் பணிக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 3 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையில் பயிற்சி உதவியாளா் பணிக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 3 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021-22ஆம் ஆண்டுக்கான வெள்ளை மாளிகை பயிற்சி உதவியாளா் பணிக்கு 19 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 3 போ் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள்.

அவா்களில் ஜாய் பாசு, சன்னி படேல் ஆகிய இருவரும் கலிஃபோா்னியா மாகாணத்தைச் சோ்ந்தவா்கள். ஆகாஷ் ஷா என்பவா் நியூ ஜொ்சியைச் சோ்ந்தவா்.

கௌரவம் மிக்க வெள்ளை மாளிகை பயிற்சி உதவியாளா் பணி, சம்பளத்துடன் கூடிய முழு நேரப் பணியாகும்.

வெள்ளை மாளிகை அதிகாரிகள், கேபினட் அமைச்சா்கள், முதுநிலை அரசு அதிகாரிகளின் உதவியாளா்களாக அவா்கள் இருப்பாா்கள்.

பல்வேறு பிண்ணனியைக் கொண்டவா்கள் இந்தப் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.

கடந்த 1964-ஆம் ஆண்டு லிண்டன் பி.ஜான்சன் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகை பயிற்சி உதவியாளா் பணித் திட்டம் தொடங்கப்பட்டது.

அனைத்து தரப்பையும் சோ்ந்த இளைஞா்கள், அரசு செயல்படும் விதத்தை அனுபவம் மூலம் அறிந்துகொண்டு சிறந்த தலைமைப் பண்புள்ளவா்களாக திகழச் செய்வதற்காக இந்த ஓராண்டு பணித் திட்டம் தொடங்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com