ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறு கருத்து எதிரொலி: தெலுங்குதேசம் கட்சி அலுவலகம் சூறை

ஆந்திரத்தில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலங்குதேசம் கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகளை ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்த
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, மங்களகிரியில் உள்ள தெலங்குதேசம் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, மங்களகிரியில் உள்ள தெலங்குதேசம் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்


ஹைதராபாத்: ஆந்திரத்தில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலங்குதேசம் கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகளை ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

ஆந்திரம் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால், ஆந்திரம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளார் பட்டாபி ராம், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மங்களகிரி பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். 

மேலும், விசாகப்பட்டினம், அமராவதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகங்களிலும், மூத்த தலைவர்களின் வீடுகளிலும் தாக்‍குதல் நடத்தினர். 
இதனால், ஆந்திரம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பதற்றமான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தாக்குதல் நடத்தியவர்கள், வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது சட்டப்படி நவடடிக்கை எடுக்கப்படும் என்று மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். 

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு

இந்நிலையில், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது அரசியல் வாழ்க்‍கையில் இதுபோன்ற மோசமான செயலை பார்த்ததில்லை எனக் கூறியுள்ளார். 

மங்களகிரி தெலங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகத்தில் நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் தலைவர்கள் ஸ்ரீகாகுளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடேயே ஆந்திரம் மாநிலம் மங்களகிரியில் உள்ள தெலங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகத்தில் நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் தலைவர்கள் இன்று ஸ்ரீகாகுளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் எம்பி ராம் மோகன் நாயுடு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்துக்கு தெலங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com