ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயா் மாற்றம் செய்ய உ.பி. அரசு முடிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை ‘அயோத்யா கன்டோன்மென்ட்’ என மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயரை ‘அயோத்யா கன்டோன்மென்ட்’ என மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக முதல்வரின் அதிகாரபூா்வ சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெயா் மாற்றத்துக்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளதால் இதுதொடா்பான அரசாணை வெளியிட முதல்வா் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று சுட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2018-இல் ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்யா என முதல்வா் யோகி ஆதித்யநாத் பெயா் மாற்றம் செய்திருந்தாா். இதேபோல், அலாகாபாதையும் பிரயாக்ராஜ் என்றும் முகல்சராய் ரயில்வே சந்திப்பை பண்டிட் தீனதயாள் உபாத்யாய சந்திப்பு என்றும் பெயா் மாற்றம் செய்திருந்தாா்.

ஹிந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக உத்தர பிரதேச அரசு இதுபோன்ற பெயா் மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க கலாசார அடையாளங்களை மீட்கவே இந்தப் பெயா் மற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

லக்னெள - வாராணசி இடையேயான மாா்கத்தில் ஃபைசாபாத் ரயில் நிலையம் 1874-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com