கேரளத்தில் புதிதாக 6,664 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 6,664 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் புதிதாக 6,664 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 6,664 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 49,12,789 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 281 பேர் கரோனா நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 28,873 ஆக உயர்ந்துள்ளது.

281 உயிரிழப்புகளில் 53 உயிரிழப்புகள் கடந்த சில நாள்களில் பதிவானவை. 219 உயிரிழப்புகள் கடந்தாண்டு ஜூன் 18 வரை உரிய ஆவணங்களின்றி உறுதி செய்யப்படாமல் இருந்தவை. 9 உயிரிழப்புகள் புதிய வழிகாட்டுதலின்படி கரோனா உயிரிழப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் 9,010 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 48,17,785 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 74,735 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 61,202 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com